தென்மண்டல அளவிலான ஐவர் ஆண்கள் ஆக்கி போட்டி புதுவை மாநில லீ புதுச்சேரி ஹாக்கி சங்கத்தின் அனுமதியோடு புதுச்சேரி ஹாக்கி டெவலப்மெண்ட் சொசைட்டி நடத்தும் தென் மண்டல அளவிலான ஐவர் ஆண்கள் ஆக்கி போட்டி அபிஷேகப்பாக்கம் செத்தினால் அரசு பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியை முன்னாள் அரசு கொறடா ஆனந்த ராமன் ஹாக்கி விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் வாரியர் ஆக்கி கிளப் அணி முதலிடமும் UPHS ஹாக்கி கிளப் இரண்டாம் இடத்தையும் பாலக்கோடு எம்ஜிஆர் கிளப் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம் மற்றும் பாமக மாநில அமைப்பாளர் கணபதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியின் முதலிடம் பெற்ற வாரியார் ஹாக்கி கிளப் அபிஷேகப்பாக்கம் அணியினருக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூபாய் 20,000/- ரொக்க பரிசு வழங்கி வீரர்களை வாழ்த்தினார்.
இரண்டாவது இடம் பிடித்த UPHS ஹாக்கி கிளப் வீரர்களுக்கு ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி வீரப்பன் சாம்பியன் கோப்பையுடன் ரூபாய் 15,000 ரொக்க பரிசு வழங்கி சிறப்பித்தார்கள்.
மேலும் இந்த போட்டியில் மூன்றாம் இடம் இடம் பிடித்த எம்ஜிஆர் பாலக்கோடு அணிக்கு சேம்பியன் கோப்பையுடன் ரூபாய் 10,000/- ரொக்க பரிசு வழங்கி சிறப்பித்தார்கள், இந்தப் போட்டியின் நான்காம் இடம் பிடித்த ஜேம்ஸ் ஹாக்கி கிளப் அணியினருக்கு சிறப்பு விருந்தினர் துரைராஜ் கோப்பையுடன் ரூபாய் ஐந்தாயிரம் ரொக்கப்பரிசு வழங்கி சிறப்பித்தார்கள். தொடர்ந்து என். ஆர். காங்கிரஸ் இளைஞர் பாசறை அணி தலைவர் கனகராஜ் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
சங்கத்தின் சேர்மன் லட்சுமி நாராயணன் தலைமை உரையாற்றினார் சங்கத்தின் செயலர் அன்பழகன், தலைவர், குமரேசன், சந்திரசேகர் பொருளாளர் மற்றும் பாலா ஆகியோரை வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை சர்வதேச ஆக்கி விளையாட்டு வீரர் செந்தில்குமார் ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் புதுவையின் சீனியர் ஆக்கி பயிற்சியாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தார்கள். இந்நிகழ்வுகளை பழனி அவர்கள் ஒருங்கிணைத்தார்கள். இத்தகவலை இந்த விளையாட்டுப் போட்டிக்கான பொறுப்பாளர் சர்வதேச ஆக்கி விளையாட்டு வீரர் செந்தில்குமார் தெரிவித்தார்கள்.