அரியாங்குப்பம் தொகுதியை சேர்ந்த சமூக சேவகர்களான சலீம் பாஷா முகமத் சபீர் பிறந்தநாள் விழா பச்சையம்மன் அறக்கட்டளை சார்பாக முருகப்பாக்கம் துரோபதி அம்மன் ஆலய திடல் வளாகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவில் பச்சைவாழி அம்மன் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கருணா என்கின்ற மனோகரன் தலைமை தாங்கினார். பச்சைவாழியம்மன் முன்னிலை வகித்தார். மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் விழாவில் ஆயிரம் இருக்கும் மேற்பட்ட மக்களுக்கு அரிசி சர்க்கரை சேமியா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. விழாவில் பச்சை வாழியமான அறக்கட்டளை நிர்வாகிகள் ஐயப்பன் சங்கர் அருள் விக்ரமாதித்யன் ஹரி பிரசாத் உட்பட ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.




