கோவை, செட்டிபாளையம் அருகே உள்ள கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் ஒரு கல்குவாரி செயல்பட்டு வருவதாகவும், அங்கு பாறைகளுக்கு வெடி வைக்கும் போது கற்கள் சிதறிக்கொண்டு அப்பகுதியில் வீடுகள், ஆடு மாடுகள் போன்ற கால்நடைகள் மீது விழுந்து விடுவதாகவும், வெடி வைப்பதாலும், லாரிகளில் கொண்டு செல்லும்போது புகை மற்றும் தூசிகள் அப்பகுதி முழுவதும் பரவி அப்பகுதி பொதுமக்களின் சுவாச கோளாறுகள் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டும் அப்பகுதி பொதுமக்கள், குடியிருப்பு பகுதியில் எப்படி ? அரசு அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள்.

மேலும் இது குறித்து புகார் அளிக்கச் சென்றால் காவல்துறை கண்டு கொள்ளவில்லை என்றும், முறைகேடாக லைசன்ஸ் பெற்று இரவு, பகல் என்று பாராமல் விடிகளை வைத்து கற்களை தகர்க்கப்படுவதால், அப்பகுதியில் வீடுகளில் வசிக்க முடியாத நிலையும், விவசாயம் செய்ய முடியாத அவல நிலையில் இருப்பதாக வேதனை தெரிவிக்கும் அப்பகுதி பொதுமக்கள் . இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உடனடியாக கல்குவாரியை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது :-
கல்குவாரியால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், அங்கு குவாரியில் வெடிகள் வைக்கும் போது கற்கள் பிறந்து வந்து ஆடு மாடுகள் மேல் விழுவதாகவும், அவர்கள் தவறான முறையில் லைசென்ஸ் பெற்று இருப்பதாகவும், அங்கு கல்குவாரி அமைக்க லைசன்ஸ் வாங்கியது கூட பொது மக்களுக்கு தெரியாது என்றம், முறைகேடாக லைசன்ஸ் பெற்று கல்குவாரி நடத்துவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், கல்குவாரியை மூடினால் மட்டுமே அப்பகுதியில் விவசாயம் செய்ய முடியும் என்றும், கூறினார்.
மேலும் கடந்த 2019-ல் அவர்கள் கல்குவாரி தொடங்கியதில் இருந்தே தாங்கள் புகார் கொடுத்து வருவதாகவும், புகார் கொடுக்கும் இடைவெளிகளில் அவர்கள் கல்குவாரியை இயக்காமல் இருந்து விட்டு கடந்த ஒரு மாதமாக கல் குவாரியை இயக்கி வருகிறார்கள்.
இதனால் அப்பகுதியில் வசிக்கும், வயதானவர்கள் குழந்தைகள் எல்லாம் அங்கு இருப்பதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறோம். அதேபோல் விவசாயத்தை நம்பியே தங்கள் வாழ்ந்து வருவதால் நிலத்தடி நீர் கடுமையாக அங்கு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 50 க்கும் மேற்பட்டோர் அங்கு 150 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வருவதாகவும் கூறியவர்கள், கல்குவாரியில் வெடி வைப்பதை, பார்வையிட வந்த காவல் துறையினரும் அதை கண்டுகொள்ளாமல் சென்று விடுகின்றனர் என்றும்,
நேற்றைய தினம் அங்கு வந்த காவலர் ஒருவர், சாலை விபத்துகளில் சாவது இல்லையா ? அதுபோல் தான் இங்கு கல் விழுந்தாலும் என்று அசால்டாக கூறுவதாகவும், நீங்கள் யாரும் ? இங்கு பிரச்சனை செய்யக் கூடாது அப்படி செய்தால் உங்கள் மேல் வழக்கு செட்டிபாளையம் காவல் நிலையத்தை சேர்ந்த காவலரே எங்களிடம் மிரட்டுவதாகவும் வேதனை தெரிவித்தனர் அப்பகுதி பொதுமக்கள் .