முதல்வர் மக்களுக்கும் பதில் சொல்ல கடமை பட்டவர், எதிர்கட்சிக்கும் பதில் சொல்ல கடமை பட்டவர், மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் எதிர்கட்சியின் கேள்விகளுக்கு பொறுமையோடு நிதானத்தோடு அவர் பதில் சொல்ல வேண்டும், முதல்வருக்கு பொறுமையென்றால் என்ன விலை என கற்று தர வேண்டியிருக்கிறது., என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி, சூலப்புரம், உத்தப்புரம் கிராமங்களில் சேடபட்டி ஒன்றிய அதிமுக பூத் கமிட்டி கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின் உத்தப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.
மூன்று ஆண்டுகள் புறக்கணித்த முதல்வர் இன்று வழங்கும் பதில்கள் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் இருக்கிறது.
திடீர் அந்தர் பல்டி ஆகாச பல்டி அடித்திருக்கும் முதல்வர் இன்று புலம்புவதை பார்க்கும் போது இந்த ஆண்டு கலந்து கொண்டதன் மர்மம் என்ன., தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக என்று சொன்னால் கடந்த மூன்று ஆண்டுகளில் கலந்து கொள்ளாததால் தமிழ்நாடு பின்தங்கி போய் உள்ளது என ஒத்துக் கொள்கிறாரா., என்பது தான் எதிர்கட்சி தலைவரின் கேள்வி,

எதிர்கட்சி தலைவர் என்று சொன்னால் கேள்வி கேட்பது எங்களுடைய தார்மீக உரிமை, அந்த தார்மீக உரிமை மக்கள் கொடுத்தது. அந்த கடமையின் அடிப்படையில் தான் ராமன் வில்லிலிருந்து வரும் அம்பை போல எதிரிகளை துளைத்து எடுக்கும் கேள்வி கனைகளுக்கு பதில் சொல்ல முடியாமல் இன்று முதல்வர் திக்கி திணறி, தடுமாறி கொண்டிருப்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.
எனவே மூன்று ஆண்டுகள் நிதி ஆயூக் கூட்டத்தை புறக்கணித்ததால் தமிழ்நாடு பின் தங்கியது, தமிழ்நாடு வளர்ச்சி பெறவில்லை. தமிழ்நாடு நிதி பெற முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டு இந்த நிதி ஆயூக் கூட்டத்தில் கலந்து கொண்டாரா? அல்லது உதயநிதி அண்ணாவை காப்பாற்றுவதற்காக கலந்து கொண்டாரா, அல்லது குடும்ப உறுப்பினர்களை இ.டி. நெருக்கடியில் இருந்து காப்பாற்றுவதற்காக கலந்து கொண்டாரா என்பது மக்களின் கேள்வியாக இருக்கிறது.
மக்களுக்கு எழுகிற கேள்வியைத் தான் எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் முதல்வரை பார்த்து கேட்கிறார். எதிர்கட்சி தலைவருக்கு பதில் சொல்ல திறாணி இல்லை என்று சொல்லி அவர் ஒப்புக் கொள்வாரே ஆனால் அவரிடத்தில் கேள்வி கேட்பதற்கு என்ன இருக்கிறது.
முதல்வர் மக்களுக்கும் பதில் சொல்ல கடமை பட்டவர், எதிர்கட்சிக்கும் பதில் சொல்ல கடமை பட்டவர். மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் எதிர்கட்சியின் கேள்விகளுக்கு பொறுமையோடு நிதானத்தோடு அவர் பதில் சொல்ல வேண்டும். முதல்வருக்கு பொறுமையென்றால் என்ன விலை என கற்று தர வேண்டியிருக்கிறது.
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் மழை காரணமாக நெற் பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் நெற் பயிர்கள் சாய்ந்து, முளைக்கும் தருவாய் ஏற்பட்டிருப்பதால், விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே அரசு இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்யாததால், தனியார் மையங்களில் விற்பனை செய்கிற காரணத்தால் ஒரு மூடை நெல்லுக்கு 400 ரூபாய்க்கும் அதிகமாக விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.
நாங்கள் இந்த மாவட்டத்தின் அமைச்சராக இருந்த போது தனியாக துணை ஆட்சியரை நியமணம் செய்து வேண்டிய அளவு நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தனியார் கொள்முதல் செய்ய அனுமதிக்கவில்லை அதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்தது.
இப்போது மாவட்ட ஆட்சியர் தலைவர் நெல் கொள்முதல் திறக்க அறிவித்துள்ளார், அனுமதி கொடுத்தும் கூட நுகர்பொருள் வாணிப கழகத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க மறுக்கிறார்கள், கேட்டால் ஆள் பற்றாக்குறை என்கிறார்கள்., இதையெல்லாம் பார்க்க திமுகவிற்கு நேரமில்லை, நேரம் இருக்கிறதா, மக்கள் மீது அக்கரை இருக்கிறதா என்று தெரியவில்லை.
ஆள் பற்றாக்குறை என்று மெத்தன போக்கோடு இருப்பது என்பது விவசாயிகளுடைய நஷ்டத்தை ஈடுகட்டாது.
பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு முன் வர வேண்டும், விளைந்த நெல்மணிகளை அரசே கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்ய வேண்டும். தனியாரிடத்தில் போனால் ஒரு மூடைக்கு 400 என்பது இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என பேட்டியளித்தார்.