திருநள்ளாறு சட்டமன்ற தொகுதி புதிய பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பதவியேற்பு விழா புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் வாழ்த்துரை வழங்கினார்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதிக்கு பாஜக நிர்வாகிகள், கேந்திர பொறுப்பாளர்கள், கிளை மற்றும் அணி தலைவர்கள் பதவியேற்பு விழா திருநள்ளாறில் நடைபெற்றது. முன்னதாக குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கியது. இதில் பாரதமாதா, பாஜகவின் ஸ்தாபகர்கள் தீனதயாள் உபாத்தியாயா, சியாம் பிரசாத் முகர்ஜி ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருநள்ளாறு சட்டமன்ற தொகுதிக்கு பாஜக நிர்வாகிகள், கேந்திர பொறுப்பாளர்கள், கிளை மற்றும் அணி தலைவர்கள் ஆகியோர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநில பாஜக துணை தலைவர்கள் ஜி.என்.எஸ்.ராஜசேகரன், வி எம் சி கணபதி, மாநில செயலாளர் அமுதா ராணி, மாவட்டத் தலைவர் முருகதாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் சண்முகம் வாழ்த்துரை வழங்கினர்.
புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் ஜி என் எஸ் ராஜசேகரன் வாழ்த்துரை வழங்கிய போது "புதிதாக பதவியேற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். கேந்திர பொறுப்பாளர்கள் கிளை தலைவர்களை அணுகி மேலும் 12 பேரை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தினார். அணித் தலைவர்கள் அனைவரும் ஒவ்வொரு கிளைக்கும் குறைந்தது 10 பேரை நியமிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். ஜூன் 15ஆம் தேதிக்குள்ளாக இந்த இலக்கை அடைந்து விட்டால் ஒவ்வொரு கேந்திரத்திலும் இதே போல பதவியேற்பு விழா நடத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார். நமது பலத்தை மேலும் கூட்டும் எனவும் அவர் தெரிவித்தார்.