காரைக்கால் பேரளம் ரயில் பாதையில் நாளை சோதனை ஓட்டம். அவசரக்கதியில் நடைபெற்ற உயர் மின்னழுத்த பாதை பணியின் போது மின்சாரம் தாக்கி வட மாநில ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
காரைக்கால் பேரளம் இடையே கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பாக நிறுத்தப்பட்ட ரயில் பாதை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரயில்வே பாதைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை காரைக்கால் பேரளம் ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதால் உயர் மின்னழுத்த மின் பாதைக்கான பணிகள் இன்று அவசரக்கதியில் நடைபெற்று வருகிறது.
திருநள்ளாறு ரயில் நிலையம் அருகே உயர் மின்னழுத்த மின் பாதையில் பணி செய்து கொண்டிருந்தபோது, வட மாநில தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு அவசர அவசரமாக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அவர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஆலம் ஹக் (21), ஆபத்தான நிலையில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை அதிதிவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடைபெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து திருநள்ளாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல ரயில்வே பணியின் போது திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் நாளை சோதனை ஓட்டம் என்பதால் அவசரகதியில் பணிகளை செய்ததே இந்த விபத்திற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.