• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மின்சாரம் இல்லாததால் 15000 கோழிகள் உயிரிழப்பு!!

ByK Kaliraj

May 17, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பி.திருவேங்கிடபுரம் கிராமம் உள்ளது.ராஜபாளையம் அருகே சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த செல்ல முத்து பாண்டியன் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக அதிநவீன குளிரூட்டப்பட்ட கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.

சுமார் 15,000 கோழிகள் வளர்க்கப்பட்டு வந்த இந்த கோழி பண்ணையில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் ஏற்பட்ட தொழில் பாதிப்பு காரணமாக மின் கட்டணம் செலுத்த முடியாமல் நிலுவை மின்கட்டண தொகையாக 26, 765 ரூபாய் இருந்துள்ளது. அதோடு கடந்த மாதத்திற்காண மின் கட்டண தொகை ரூபாய் 22,233 தொகையை செலுத்த வரும் 20ம் தேதி வரை கால அவகாசம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று கடந்த மாதத்திற்கான மின்கட்டண தொகையை செலுத்துவதற்காக மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றபோது ஏற்கனவே நிலவையில் உள்ள தொகையையும் சேர்த்து செலுத்த மின்வாரிய ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து கூடுதல் பணத்தை தயார் செய்து மொத்த மின் கட்டண தொகையான 49, 719 ரூபாயை செலுத்தியுள்ளார். கட்டணத்தை செலுத்திக் கொண்டிருந்த போதே மின்வாரிய ஊழியர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கோழிப்பண்ணை காண மின் இணைப்பை துண்டித்துள்ளனர். பெண் கட்டணத்தை செலுத்தி விட்டு கோழி பண்ணைக்கு வந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கோழிப்பண்ணையில் அமைக்கப்பட்டு இருந்த ஏசி செயல்படாததால் வெப்பம் தாங்காமல் 14 ஆயிரம் கோழிகள் ஒன்றன்பின் ஒன்றாக செத்து மடிந்தது.
இதைக் கண்டு நிலைகுலைந்த கோழிப்பண்ணை உரிமையாளர் சொல்லமுத்து பாண்டியன் செய்கை தெரியாது திகைத்துள்ளார்.

நிலவைக் கட்டணத்தை இன்னும் 10 நாட்களில் கோழி விற்பனையானவுடன் கட்டுவதாக ஏற்கனவே மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் தான் வேண்டுகோள் விடுத்து இருந்ததாகவும் தன்னிடம் தகவல் தெரிவிக்காமல் மின் இணைப்பை துண்டித்து விடாதீர்கள் அவ்வாறு துண்டித்தால் சிறிது நேரத்திலேயே வெப்பம் தாங்காமல் கோழிகள் இறந்து பெரும் இழப்பு ஏற்படும்.

ஏற்கனவே மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் தனது நிலையை கருத்தில் கொள்ளாமல் முன்னறிவிப்பின்றி நிலுவைத் தொகை கட்டணம் செலுத்த வேண்டியதை காரணம் காட்டி மின் இணைப்பை துண்டித்து விட்டதாகவும் இதனால் தமக்கு சுமார் 40 லட்சத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு கட்ட முடியாமல் தவிக்கும் தமக்கு அரசு கருணை அடிப்படையில் உதவி செய்யவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என அவர் கதறி அழும் காட்சி காண்போரை கண்கலங்கச் செய்கிறது.

மேலும் இச்சம்பவம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் மீது மாரனேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.