• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

10ஆம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டை சகோதரிகள்

Byவிஷா

May 17, 2025

கோவையைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் 10ஆம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.
2025ம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வில், இவர்கள் தலா 474 மதிப்பெண்கள் பெற்று, தங்களது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இருவரும் தமிழில் 95, 96, ஆங்கிலத்தில் 97, 98, கணிதத்தில் இருவரும் 94, அறிவியலில் 89, 92 மற்றும் சமூக அறிவியலில் 95, 98 என அனைத்து பாடங்களிலும் உயர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பின்னணியில் மிகவும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர்கள், பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும், இருவரும் விடாமுயற்சியைக் கைவிடாமல், அனைவருக்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.
இந்த இரட்டையர்கள் சாதித்த வெற்றி, பல பள்ளி மாணவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் தரக்கூடிய ஒன்று. பள்ளி ஆசிரியர்களும், கிராம மக்களும் இந்த சாதனையை பாராட்டி வருகிறார்கள். பெற்றோர்களும் உறவினர்களும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.