முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி கோரி, தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தும் வகையில், கன்னியாகுமரியில் தொடங்கிய சுடர் பயணக்கோரிக்கை இருசக்கர வாகன பேரணி செஞ்சிக்கோட்டை வரை பயணிக்கிறது.

இந்த பேரணி நேற்று நாகர்கோவிலில் தொடங்கி இன்று ராமநாதபுரம் வழியாக சிவகங்கை வந்தடைந்தது. முன்னதாக, சிவகங்கை அரண்மனை வாசலில் உள்ள வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
பேரணியின் போது “மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்” என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.இந்த சுடர் பயணத்திற்கு தமிழக வாழ்வுரிமை மாநில இளைஞர் அணி செயலாளர் புலேந்திரன் முருகானந்தம் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கலந்து கொண்டனர்.