பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகள் கலைமணி என்பவர் கூட்டு பட்டாவில் உள்ள தனது விவசாய நிலத்தினை தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

கிராம நிர்வாக அலுவலர் தனிப்பட்டா வழங்க 2000 லஞ்சம் கேட்டுள்ளார் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத கலைமணி பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரை அணுகியுள்ளார். அதன் பேரில் குன்னம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து பெரியம்மா பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் பட்டா மாற்றம் செய்வதற்காக 2000 ரூபாய் லஞ்சம் கையூட்டு பெற்ற கிராம அலுவலரை பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)