மதுரை வலையங்குளம் தானாக முளைத்த தனி லிங்க பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு 50 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் மெகா அன்னதான விருந்து நடைபெற்றது.
3500 கிலோ அரிசி, 3500 கிலோ காய்கறிகள், ஆயிரத்து 200 கிலோ துவரம்பருப்பு கொண்டு உணவு தயாரிக்கப்பட்டது. 50 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மெகா அன்னதான விருந்து நடைபெற்றது.

மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் முதல் நாள் எதிர் சேவை நிகழ்ச்சியாக வலையன் குளம் மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து ஏராளமான மக்கள் வைகையாற்றில் கள்ளழகரை தரிசிக்க செல்வர்.

அதனை தொடர்ந்து வளையன் குளத்தில் பொது மக்களுக்கு மெகா அன்னதான நிகழ்ச்சி நடைபெறும். இதில் 18 க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொள்வர்.

வலையங்குளம் எலியார்பத்தி, பாரப்பத்தி, குதிரை குத்தி, சாமநத்தம் கூட கோவில் , வலையபட்டி , ஆலங்குளம் , பெரிய ஆலங்குளம் சோளங்குருணி நல்லூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் குடும்பத்துடன் அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

மெகா விருத்திற்காக கத்திரிக்காய் – 1200 கிலோ, உருளைகிழங்கு – 750 கிலோ, முருங்கை -500 கிலோ, மாங்காய் 300 கிலோ – கேரட் – 250 கிலோ,பீன்ஸ் – 200 கிலோ, முட்டை கோஸ் – 300 கிலோ வாழைக்காய் – 300 கிலோ மொத்தம் மூன்றரை டன் காய்கறிகள் ஆயிரம் கிலோ துவரம்பருப்பு சேர்ந்து சாம்பார் தயார் செய்யப்பட்டது.

130 மூடை அரிசியினை கொண்டு சாதம் வழக்கப்பட்டு கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டது. வலையன்குளம் தானாக முளைத்த தனி லிங்க பெருமாள் கோவில் பூஜை முடிந்து தீர்த்தவரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.









