புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நடைபெற்ற ஜாதி கலவரத்தை காவல்துறை நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் எனவும் ஒட்டுமொத்த கலவரத்திற்கும் காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும்.

வடகாட்டில் நடைபெற்ற பட்டியலின மக்கள் மீது நடந்த தாக்குதலுக்கு தமிழக அரசும் காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் பகலவன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தி அவர்களிடம் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் படகாட்டில் பட்டியல மக்கள் தாக்கப்பட்டு 20 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை சந்தித்து நடைபெற்ற விவரங்களை கேட்டு அறிந்தும் ஆறுதல் கூறியும் நிகழ்வை பங்கேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் பகலவன். மேலும் இந்நிகழ்வில் சமூக நெறியாளர் மதுரை எவிடன்ஸ் கதிர் உடன் இருந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பகலவன் நடைபெற்ற சம்பவம் தமிழக முழுவதும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான சம்பவம் எனவும் வடகாட்டில் நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை அங்கிருந்தவர்கள் பிடித்து காவல்துறையின் ஒப்படைத்த பிறகும் கலவரம் நடைபெற்றதாகவும் சுமார் 2 மணி நேரம் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பட்டியலின மக்கள் வீடுகள் உறவுகள் ஆகியவற்றை சேதப்படுத்தியும் வீடுகளை எரித்தும் நாசப்படுத்தியதாகவும் ஆனால் காவல்துறை சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருப்பதாகவும் இதை விடுதலை சிறுத்தை கட்சி கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் இளமதி அசோகன் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.