மதுரை அவனியாபுரத்தில் ஆறாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.

ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக ரிஷப வாகனத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர் பிரியாவிடையும், கஜேந்திர வாகனத்தில் மீனாட்சி அம்மன் வீதி உலா வந்தனர். திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
கிபி ஆறாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த பாலா மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மதுரை மீனாட்சி அம்மன் சித்ரபதி திருவிழா நடைபெறுவது போல் இன்னும் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாள் விழாவாக இன்று ரிஷப வாகனத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர் பிரியாவிடையும். கஜேந்திர வாகனத்தில் மீனாட்சி அம்மன் வீதி உலா வந்தனர்.

முன்னதாக சிறுமிகளின் கோலாட்ட நிகழ்ச்சிகள் வீதி உலாவில் நடைபெற்றது. விழாவில் அவனியாபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.