• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

“நடப்போம் நலம் பெறுவோம்” நடைப்பயிற்சி..,

ByS. SRIDHAR

May 4, 2025

புதுக்கோட்டை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் 8 கி.மீ. “நடப்போம் நலம் பெறுவோம்” ஆரோக்கிய நடைப்பயிற்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் இன்று துவக்கி வைத்தார்., புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ராம்கணேஷ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.து.செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். மேலும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மருத்துவமுகாமை பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தொற்றா நோய்களான சர்க்கரை வியாதி, இரத்த கொதிப்பு, இருதய நோய்கள் ஆகியவற்றால் ஏற்படும் உடல் சார்ந்த பாதிப்புகளை தடுக்கும் விதமாகவும். அதன்மூலம் ஏற்படக்கூடிய இருதய பாதிப்புகள். பக்க விளைவுகளை குறைப்பதற்கும்.

“நடப்போம் நலம் பெறுவோம்” என்ற திட்டம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வைக்கப்பட்டதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கிலிருந்து 8 கி.மீ. கி.மீ. நடைபயிற்சி ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது.

அவர்கள் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட “நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தினை மாவட்ட அளவில் ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுமக்களுக்கு 8 கி.மீ. நடைபயிற்சி செயல்படுத்தும் விதமாக, ஒவ்வொரு மாதமும் முதல் மேற்கொள்வதை ஊக்குவித்து நடைபயிற்சி ஒருங்கிணைப்பு மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய மருத்துவ முகாம்கள், சுகாதாரத்துறை சார்பாக ஏற்பாடு “நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தின்கீழ் பதினாறு ஆரோக்கிய நடைப்பயிற்சி மருத்துவ முகாம்கள் நடைப்பெற்றுள்ளது. ஒவ்வொரு நடைப்பயற்சி முகாம்களில் சராசரியாக 200 முதல் 250 நபர்கள் பங்கு பெற்றுள்ளனர். மொத்தம் 3211 நபர்கள் கலந்துக்கொண்டு பயன் அடைந்துள்ளனர்.