விருதுநகர் மாவட்டம் /விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூர் ஜி.கே. குரூப்ஸ் உரிமையாளர் காளியப்பன் நாடார் கிச்சம்மாள் ஆகியோர் முன்னிலையில் கோவில் வளாகத்தில் 501 திருவிளக்கு பூஜை நடைபெற்றது .

இதற்கான ஏற்பாடுகளை ஏழாயிரம்பண்ணை அன்னை பாராசக்தி மாதர் சங்க நிர்வாகிகள் மற்றும் கோயம்புத்தூர் வாழ் ஏழாயிரம் பண்ணை ஆதிபராசக்தி மாதர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் பிரசாதபை மற்றும் நினைவு பரிசினை காளியப்பநாடார் வழங்கினார். ஏழாயிரம் பண்ணை நாடார் உறவின் முறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.