• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

குமரி பன்னாட்டு துறைமுகமும் விழிஞ்ஞம் துறைமுகமும் ஒன்றா.?

நாகர்கோவிலில் மக்களவையின் முன்னாள் உறுப்பினர் பொன்னார் அண்மையில் திருவனந்தபுரம் விழிஞ்ஞம் அதானி துறைமுகத்தையும், குமரியை கலவர பூமியாக மாற்றிய பன்னாட்டு துறைமுகம் பற்றிய ஒரு ஒப்பீடு கருத்து.

கன்னியாகுமரிக்கு பேரிழப்பு, பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு
ரூ.28,000 கோடி மதிப்பில் துறைமுகம் அமைக்கத் தந்ததை இழந்து நிற்கிறோம். இது பிரதமருக்கு இழப்பு அல்ல. கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் இளைஞர்களின் இழப்பு. கேரளாவில் விழிஞ்ஞம் பகுதியில் திறக்கப்பட்ட பல்நோக்கு துறைமுக திட்டத்தை குறிப்பிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பொன்னாரின் கருத்து குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிலையின், சமூக ஆர்வலர்கள் பலரிடம், பொன்னாரின் அறிக்கையை காண்பித்து கருத்து கேட்ட போது,

சிலர் ஒரு ஏளனம் புன்னகையை வெளிபடுத்திவிட்டு, கடந்து விட்டனர். சிலோரோ நம்மை பார்த்த பார்வையில் தொத்தி நின்ற கேள்வி குறி. உனக்கெல்லாம் வேறு வேலை இல்லையா.?என்பது போல் இருந்தது.

திருவனந்தபுரம் விழிஞ்ஞம் துறைமுகம். அன்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி அமைச்சரவையின் ஆதரவோடு கை ஒப்பந்தம் ஆன திட்டம். கேரளாவில் எந்த கட்சி கூட்டணி ஆட்சி என்றாலும், கேரளாவில் உள்ள மலகளை சிதைத்து தங்கள் மாநிலத்தின் முன்னேற்றம் எதுவாக இருந்தாலும் வேண்டாம்.

எங்கள் மாநிலத்தின் மலை எங்களுக்கு இயற்கை தந்துள்ள பாதுகாப்பு. கேரளவின் எந்த சித்தாந்த அரசியல் வாதியும், அன்று முதல் இன்று வரை ஒற்றுமையாக உள்ளனர். திருவனந்தபுரம் அதானி யின் விழிஞ்ஞம் துறைமுகம் திட்டத்திற்கு, குமரி உட்பட. தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள மலைத்தொடரை சிதைத்து, விழிஞ்ஞம் கடலில் கொண்டு கொட்டி உருவாகிய விழிஞ்ஞம் துறைமுகம்.

குமரியில் பன்னாட்டு துறைமுகம் என்பதே ஒரு போலியானது. குமரியில் உள்ள 47_மீனவ கிராமங்களில் அடர்த்தியாக வாழும் மீனவ மக்களை இடம் பெயர்ச்சி செய்வதின் மூலம் தங்களின் வாக்குகளை அதிகம் படுத்தும் ஒற்றை சுயநல சிந்தனை மட்டுமே.

இந்திய ஜனநாயகம் போராட்டத்திற்கும் ஒவ்வொரு சமுக மக்களின் பொது கருத்தை பொது வெளியில் வெளிப்படுத்த சுதந்திர பெற்ற நாள் முதல், இந்திய நாட்டின் மக்களுக்கு வழங்கிய உரிமை. ஒன்றிய அரசின் கப்பல் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் இணை அமைச்சராக இருந்த பொன்னார்.செயல்படுத்தவே முடியாதது, பன்னாட்டு துறைமுக திட்டம் என தெரிந்தே அறிவித்த திட்டம்.!

மீனவ மக்கள், சமூக ஆர்வலர்கள், சில அருட்பணி பணியாளர்கள். அரசின் பன்னாட்டு துறைமுகத்திற்கு எதிராக போராட்ட களத்திற்கு வந்ததும். பாஜக மீனவர் போராட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியது ஜனநாயக உரிமை. ஆனால் இதில் பாஜகவின் அணுகுமுறை. மீனவர்கள் அவர்களது கண்டன போராட்டத்திற்கு உரிய முறையில் காவல்துறையிடம் அனுமதி பெற்ற நிலையில், மீனவர்கள் போராட்ட தினத்திலே, அதற்கு முந்திய நாள் பாஜகவும் மீனவர்களின் போராட்டத்திற்கு எதிராக போராட்டம் அறிவிக்க. குமரி காவல்துறை என்ன செய்வது என்று தெரியாது திகைத்து நின்றது.

அனுமதி பெறாத பாஜகவின் போராட்டத்திற்கு எதிராக உரிய அனுமதி பெற்றிருந்த மீனவர் போராட்டத்திற்கு “தடை”என போராட்டத்திற்கு முந்திய நாள் நடு இரவில் மீனவர்கள் போராட்டத்திற்கு அனுமதி “ரத்து”என்ற அறிவிப்பை,போராட்ட குழுக்கள் இல்லங்களில் கதவில் கொண்டு ஒட்டியது.

பாஜக வலியுறுத்தலால் உரிய அனுமதி பெற்றிருந்தும் போராட்டம் நடத்தும் ஜனநாயக உரிமை மீனவர்களுக்கு மறுக்கப்பட்டது. துறைமுகத்திற்கான இடம் என ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இடங்களுக்கு மாறியது. இதனை அடுத்து நடந்த அதிசயம். திருமண மண்டபத்தில் நடந்த துறைமுகம் திட்டம் குறித்த கல்வெட்டு திறக்கப்பட்டது. வராத துறைமுகத்திற்கு எதிர்ப்பு,ஆதரவு என்ற இருமுனை போட்டிக்கு மத்தியில் அன்று டெல்லியில் இருந்து கசிந்த ஒரு செய்தி.

மத்திய கப்பல், நெடுஞ்சாலை துறை. கன்னியாகுமரி பன்னாட்டு துறைமுகம் திட்டத்திற்கு ரூ.1.00 கூட அனுமதிக்கவில்லை. தூத்துக்குடி வ.ஊ.சி. துறைமுகம் தான் இதற்கான சிலவை மேற்கொண்டுள்ளதாக, மாலைக்கும், மடுவுக்கும் வித்தியாசம் உள்ள வெவ்வேறு திட்டத்தை ஒற்றை முடுச்சிக்குள் போடுவதற்கு பொன்னார் எண்ணத்தின் கருத்து என்பது கன்னியாகுமரி மக்களின் கருத்தாக இருக்கிறது.

குமரியின் அமைதியை மீண்டும் குலைக்க, ஒன்றிய அரசு கன்னியாகுமரி கடல் பகுதியில் எறிவாய்வு எடுக்க அனுமதித்துள்ளது. குமரி மீனவர்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.