• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மேதின கூட்டம்..,

ByG.Suresh

May 2, 2025

சிவகங்கை மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மேதின கூட்டம் சிவகங்கை சண்முகம் ராஜா கலையரங்கத்தில் மாவட்ட கழக செயலாளர் செந்தில் நாதன் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக அரசு மக்களை கொள்ளை அடிக்கும் அரசாக உள்ளது மேலும் தமிழகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் கட்சியின் தலைவராக முதலமைச்சராக இருந்து கொண்டு மன்னராட்சி போல் நடத்தி வருகின்றனர்.

இதற்கெல்லாம் முடிவு கட்ட வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் புரட்சி தமிழர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அரசு அமைய அனைவரும் பாடுபட வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அசோக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உமாதேவன் , கற்பகம் இளங்கோ மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.