• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

விஜய் வருகைக்காக காத்திருக்கும் ரசிகர்கள்..,

ByKalamegam Viswanathan

May 1, 2025

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி பகுதியில் ஜனநாயகன் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் இன்று மதுரை வருவதாக தகவல் வந்ததை அடுத்து காலை முதலே மதுரை விமான நிலையத்தில் பெண்கள் குழந்தைகள் என விஜய் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மதியம் 2 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்டு 3 அளவில் மதுரை வந்து இங்கிருந்து சாலை மார்க்கமாக திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்கிறார் இரண்டு அல்லது மூன்று நாள் அங்கு நடைபெறும் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு மீண்டும் மதுரை வந்து சென்னை திரும்புகிறார்.

இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் பயணிகள் வருகை தரும் இடத்திற்கு முன்பு குவிந்து டிவி கே டிவி கே என்று தவெகாவினர் கோசம் எழுப்பி வருகின்றனர்.

தவெக தலைவர் விஜய் கட்சி தொடங்கி பின் மதுரைக்கு வருவது இது முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.