தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த சந்தைக்கு செல்லும் பிரதான சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது.,
உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் இயங்கும் இந்த சந்தைக்கு செல்லும் சாலையை சீரமைப்பதில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், நகராட்சி நிர்வாகத்தினரிடையே உள்ள குளறுபடியால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை நீடித்து வருகிறது.,

இதனால் தினசரி சந்தை பகுதிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வரும் அலுவலர்களும் பெரும் சிரமத்தை சந்தித்து வரும் சூழலில் கடந்த 23ஆம் தேதி விவசாய சங்கங்கள் இணைந்து இச்சாலையை சீரமைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.,
இந்நிலையில் இன்று அடுத்தகட்ட போராட்டமாக தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், உசிலம்பட்டி 58 கால்வாய் விவசாய சங்கம் இணைந்து உசிலம்பட்டி தேவர் சிலையிலிருந்து ஊர்வலமாக சென்று உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு அதிமுகவின் இபிஎஸ் அணி, அதிமுக ஒபிஎஸ் அணி நிர்வாகிகள், பார்வட் ப்ளாக் நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் உசிலம்பட்டி காவல் ஆய்வாளர்கள் ஆனந்த், வனிதா தலைமையிலான போலீசார் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரின் கவணத்திற்கு கொண்டு சென்று விரைவில் சாலை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது பழமைவாய்ந்த உசிலம்பட்டி சந்தை., இப்பகுதியில் தினசரி மார்கெட், பூ மார்க்கெட், உழவர் சந்தை, ஆட்டுச் சந்தை உள்ளிட்ட சந்தைகளும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், உசிலம்பட்டி அரசு நூலகம், உசிலம்பட்டி ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகங்கள் என அரசு அலுவலகங்களும் இயங்கி வருகிறது.
தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த சந்தைக்கு செல்லும் பிரதான சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் இயங்கும் இந்த சந்தைக்கு செல்லும் சாலையை சீரமைப்பதில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், நகராட்சி நிர்வாகத்தினரிடையே உள்ள குளறுபடியால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை நீடித்து வருகிறது.,
இதனால் தினசரி சந்தை பகுதிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வரும் அலுவலர்களும் பெரும் சிரமத்தை சந்தித்து வரும் சூழலில் கடந்த 23ஆம் தேதி விவசாய சங்கங்கள் இணைந்து இச்சாலையை சீரமைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.,
இந்நிலையில் இன்று அடுத்தகட்ட போராட்டமாக தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், உசிலம்பட்டி 58 கால்வாய் விவசாய சங்கம் இணைந்து உசிலம்பட்டி தேவர் சிலையிலிருந்து ஊர்வலமாக சென்று உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.,
இந்த போராட்டத்திற்கு அதிமுகவின் இபிஎஸ் அணி, அதிமுக ஒபிஎஸ் அணி நிர்வாகிகள், பார்வட் ப்ளாக் நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டனர்.,
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் உசிலம்பட்டி காவல் ஆய்வாளர்கள் ஆனந்த், வனிதா தலைமையிலான போலீசார் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரின் கவணத்திற்கு கொண்டு சென்று விரைவில் சாலை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.,

; ?>)
; ?>)
; ?>)