சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி வடக்கு தெருவில் இருந்து பேர்நாயக்கன்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டன. ஆனால் குடியிருப்பு வீடுகள் முழுவதும் தரம் இல்லாமல் கட்டப்பட்டதால் யாரும் குடியேறவில்லை. அதனால் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்து விட்டன. மேலும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் தாயில்பட்டி ஊராட்சியில் இருந்து வெளியேறும் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை போடும் இடமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக மாற்றப்பட்டுவிட்டது. மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்படாமல் அப்படியே தீ வைத்து கொளுத்தப்படுகின்றன. இந்நிலையில் குப்பை கழிவுகளில் அலுமினியம் மற்றும் சில்வர் அட்டை கழிவுகள் மூட்டை மூடைடாண
கொட்டப்பட்டுள்ளன. மழை பெய்தால் இந்த அட்டை கழிவுகள் அருகில் உள்ள பெரிய கண்மாய்க்கு தண்ணீருடன் கலந்து விடும். அவ்வாறு கலந்து விட்டால் பல்வேறு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் கெட்டுவிடும். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பை கழிவுகளில் அலுமினியம் சில்வர் அட்டை கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
குப்பைகளில் சில்வர், அலுமினிய அட்டைகள் கொட்டப்படுவதை தடுக்க கோரிக்கை
