விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை ஆய்வுகளில் சமீப காலமாக கடுமையான விதிமுறைகளால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதால் பட்டாசு ஆலையின் உரிமம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இதனால் சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலை மீண்டும் உரிமம் பெற்று திறக்க உரிமையாளர்கள் பல வகையில் சிரமப்படுகின்றனர். இதனால் பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுகிறது .ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாய நிலை உள்ளது. இந்நிலையில் பட்டாசு ஆய்வின் போது எடுக்கும் நடவடிக்கை பட்டாசு தொழில் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும் எனவும் மேலும் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி அடங்கிய மனுவை வருவாய்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், ஆகியோரை சென்னையில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மனுக்களை கொடுத்தனர்.
தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்க தலைவர் கணேசன், துணைத் தலைவர் அபி ரூபன், மற்றும் நிர்வாகிகள், உற்பத்தியாளர்கள், சிவகாசி திமுக மாநகர செயலாளர் உதயசூரியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர்கள் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக பட்டாசு உற்பத்தியாளர்களிடம் அமைச்சர்கள் தெரிவித்தனர்.