செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவரின் அலட்சியம்.

14/04/2025 அன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர பிரிவில் CT ஸ்கேன் எடுத்து மருத்துவம் பார்த்த பெரியவரின் யூரின் பேக்கை அருகில் உள்ள மருத்துவமனையில் எடுத்துக்கொள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவர் அறிவுறுத்தலின்படி 17/04/2025 அன்று கூவத்தூர் அரசு மருத்துவமனையில் யூரின் பேகை கழற்றுவதற்கு சென்ற 80 வயது முதியவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று கழற்றிக் கொள்ளுமாறு கூவத்தூர் அரசு மருத்துவர் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்ததற்கான அனைத்து ஆவணங்களை அவர் பார்வைக்கு காண்பித்தும் டிஸ்சார்ஜ் ஸ்லிப் இல்லையெனில் மருத்துவம் பார்க்க முடியாது என்று கூறிவிட்டார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 17/04/2025 அன்று முதியவருக்கு இட வசதி இல்லாததால் அட்மிஷனே போடவில்லை. அவசரப் பிரிவில் மருத்துவம் பார்த்து அனுப்பி விட்டனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அட்மிஷன் போடாமல் அனுப்பியது யாருடைய தவறு?
டிஸ்சார்ஜ் ஸ்லிப் இருந்தால் மட்டுமே மருத்துவம் பார்ப்பேன் என்று அரசு மருத்துவர் கூறுவது சரியானதா??
வேறு வழி இல்லாமல் தனியார் மருத்துவமனைக்குச் சென்று யூரின் பேகை ரிமூவ் செய்து பெரியவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இவ்வாறு பொதுமக்கள் மறைமுகமாக தனியார் மருத்துவமனையை நோக்கி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இது போன்ற அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.





