நீங்கள் கோபப்படும் நபராக இருந்தால், உங்களின் முதல் எதிரி நீங்கள் தான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
யார் மீதும் எப்பொழுதும் எதற்காகவும் கோபப்படாதீர்கள். அன்பால் சாதிக்க முடியாததை கோபத்தால் சாதிக்க முடியாது.
எந்த சந்தர்பத்தையும் எப்பேர்ப்பட்ட சூழலையும் சமாளிக்கத் தெரிந்த அறிவு நிறைந்தவராக நீங்கள் இருக்கலாம்.
ஆனால் அன்பின் முன் உங்கள் அதே அறிவென்னும் ஆயுதம் பலமிழந்து போகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் விரும்பியது முளைக்காது.
நீங்கள் விதைத்ததே முளைக்கும்.
நல்லதை விதைத்து நல்லதை அறுவடை செய்யுங்கள்.