மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கல்லணை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாயாண்டி (58) என்பவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக , அக்கிராமத்தில் பருத்தி பயிர்களை பயிரிட்டு , தங்களது பிழைப்பை நடத்திவரும் இவர்கள், தங்களது வாழ்வாதாரமான விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வரும் நிலையில், நேற்று இரவு சில மர்ம நபர்கள் டிராக்டர் மூலம் மாயாண்டி நிலத்தில் பருத்திச் செடிகளை எல்லாம் அழித்துவிட்டு, மாயமாகி உள்ளனர்.

பல லட்ச ரூபாய் செலவிட்டு பருத்தி பயிரிட்ட மாயாண்டி அதிகாலையில் பார்த்தபோது, அதிர்ச்சி அடைந்தார். பருத்தி செடி பயிரிட்ட இடங்கள் முழுவதும் வேரோடு வேராக செடியில் மண்ணுடன் சாய்ந்துள்ளதைக் கண்டு வேதனை அடைந்தார். இது தொடர்பாக, கூடக் கோவில் காவல் நிலையத்தில் மாயாண்டி தனது நிலத்தை நாசப்படுத்திய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தங்களது இழப்பீட்டுத் தொகையை பெற்று தர வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.