சிவகங்கை அருகே சாத்தரசன்கோட்டை உடையரேந்தலைச் சேர்ந்த லிங்கம் மனைவி எஸ்தர் (54). இவர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் ஆய்வு கூடத்தை சுத்தம் செய்தார். அப்போது ‘ஆசிட்’ புகை தாக்கி அவரது முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. மயக்கமடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிவகங்கை நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதனை அடுத்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று எஸ்தர் என்கிற பெண் தூய்மை பணியாளர் ஆசிட் புகை தாக்கி பாதிக்கப்பட்ட சம்பவம் எதிரொலி. பணி பாதுகாப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரி மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் 150க்கும் மேற்பட்டோர் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம். நடத்தி வருகின்றனர் மருத்துவமனையின் தூய்மை பணிகள் முழுமையான பாதிப்பு. நிர்வாகம் சார்பாக சமாதான பேச்சுவார்த்தை. நடத்தி வருகின்றனர்.