மதுரை திருப்பரங்குன்றம் பகுதியிலிருந்து காளவாசல் நோக்கி சரக்கு ஆட்டோ பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பாலத்தின் இறக்கத்தில் சென்று கொண்டிருந்தபோது சரக்கு ஆட்டோ அதி வேகமாக சென்றதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் காளவாசல் பகுதியில் இருந்து பழங்காநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் ஆட்டோவின் இடையில் சிக்கிக் கொண்டனர்.

மேலும் ஆட்டோ ஓட்டுநர் படுகாயம் அடைந்தார் சம்பவம் குறித்த தகவல் அறிந்த திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை 108 அவசர கால ஊர்தி மூலமாக 3 பேரையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் மேலும் சம்பவம் குறித்து திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில் சரக்கு ஆட்டோ அதிவேகமாக பாலத்தில் இருந்து இறங்கியதும் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியதில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்தவரின் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர் ஆட்டோ ஓட்டுநர் காயம் அடைந்த நிலையில் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன மேலும் பாலம் ஆனது முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.