பழனியில் மாநில அளவிலான பழங்கால நாணயக் கண்காட்சி நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் பழங்கால நாணயங்கள் கண்காட்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள நாணய ஆர்வலர்கள் பலரும் தாங்கள் சேகரித்து வைத்துள்ள பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுக்களை காட்சி படுத்தினர்.

இதில் சோழர், பாண்டியர், பல்லவர்கள், விஜயநகர பேரரசு, கலிங்கர்கள், பல்வேறு இஸ்லாமிய மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் பொற்காசுகள், பிரிட்டிஷ் கால ரூபாய் நோட்டுக்கள், பண்டைய இந்திய நாட்டின் ரூபாய் நோட்டுக்கள், பழங்கால சிறுசிறு சாமி சிலைகள், பழங்கால நாணயங்கள் முதல் 100ரூபாய், 225ரூபாய், 500ரூபாய், 525ரூபாய், 550ரூபாய் மற்றும் 1000ரூபாய் நாணயங்கள் என பார்க்கமுடியாத அரிதான நாணயங்கள் வரை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
மேலும் பழங்கால பத்திரங்கள், ஆவணங்கள், ஆயுதங்கள், சுதந்திரத்திற்கு முந்தைய ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களும் இடம் பெற்றிருந்தன. மூன்று நாட்கள் நடைபெறும் நாணய கண்காட்சியில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.