ஐபிஎல் போட்டிகளைப் பெரிய திரையில் நேரலையில் ஒளிபரப்புவதற்கு Fan Park -கள் அமைக்கப்படுகின்றன. 2025 சீசனுக்கான ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க, 23 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 50 நகரங்களில் Fan Park -கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஐபிஎல் ஃபேன் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகம், போட்டிகளைப் பார்க்க ரசிகர்களுக்கு ஒரு பொதுவெளியை தேர்வு செய்து, அங்கு பெரிய திரை மற்றும் ஒலிபெருக்கியை வைத்து, போட்டியை நேரலையில் ஒளிபரப்புகிறது. இந்த பொதுவெளிதான் ஃபேன் பார்க் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்து வரும் 19ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ள குஜராத் டைட்டன்ஸ் , டெல்லி கேப்பிட்டல் இடையேயான போட்டியும் , ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையே போட்டியும், வரும் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ராஜஸ்தான் ராயல் , பஞ்சாப் கிங்ஸ் இடையான போட்டியும், மும்பை இந்தியன்ஸ் , சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான போட்டிகளை காரைக்கால் உள்ள விளையாட்டு அரங்கத்தில் திரையில் நேரலையில் ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது ஐபிஎல் நிர்வாகம்.
இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கலந்து கொண்டு நேரலையில் கிரிக்கெட்டை கண்டு ரசிக்குமாறு ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.