நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள சோலூர் கிராமத்தில் அதிக அளவிலான தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகள் உள்ளன இதனால் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது.

சிறுத்தை புலி உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி இந்த பகுதியில் உலா வருகின்றன. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேயிலை தோட்டத்தில் காட்டு யானை உலா வந்தது.
அப்போது காரில் சென்றவர்களை பார்த்ததும் வேகமாக தாக்க ஓடி வந்தது. அப்போது காரில் சென்றவர்கள் யானையிடம் இருந்து தப்பித்தனர். இந்த நிலையில் இரவு நேரத்தில் சோலூர் பிக்கைகண்டி கிராமத்தில் புகுந்த காட்டு யானை விவசாய நிலங்களை சேதப்படுத்தியது. யானை ஊருக்குள் உலா வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
உடனடியாக வனத்துறையினர் யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.