• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சரணாலயம் அமைக்க வனத்துறை அதிகாரிகள் ஆய்வு..,

ByK Kaliraj

Apr 17, 2025

சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா சங்கரபாண்டியாபுரத்தில் நூற்றுக்கணக்கில் மஞ்சள் மூக்கு நாரைகள், கூழக் கூட பறவைகள் இனப்பெருக்கத்திற்காக இங்கு உள்ள புளிய மரங்களில் கூடு கட்டி தங்கி உள்ளன.
பல வருடங்களாக இனப்பெருக்கத்திற்கு தவறாமல் வருகை தரும் பறவைகளை பாதுகாக்க சரணாலயம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன் பேரில் வனத்துறை துணை இயக்குனர் தேவராஜன் அறிவுரையின் பேரில் சிவகாசி வனச்சரகர் பூவேந்தன் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் சங்கரபாண்டிய புரத்தில் பறவைகள் தங்கி இருக்கும் இடங்கள் மற்றும் அருகில் உள்ள வீரம்மாள் ஊரணி ஆகியவற்றை பார்வையிட்டனர்.

தொடர்ந்து சரணாலயம் அமைப்பது குறித்து சாத்திய கூறுகள் உள்ளதா என்பதையும் வாழ்விட அமைப்பு, மக்களுக்கும், பறவைகளுக்கும் உளள தொடர்பு மற்றும் சூழல் குறித்து வனத்துறையினர் ஒரு மணி நேரம் ஆய்வு செய்தனர்.