• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

Byமதி

Dec 3, 2021

சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி, ஆத்தூர் அருகே மாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் வெங்கடாசலம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர். அந்த சோதனையில் வெங்கடாசலம் வீட்டில் 3 கிலோ தங்கம், 10 கிலோ சந்தனப் பொருட்கள், ரூ.13.5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

இவர் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை லஞ்சமாக வசூல் செய்ததாகவும் அவர்மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்தநிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.