• Tue. Mar 24th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

முல்லை பெரியாறில் புதிய அணை?

Byமதி

Dec 3, 2021

தமிழ்நாடு, கேரளா இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகே முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்ட வலியுறுத்தி கேரளாவை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பிக்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என கேரளா கூறிவரும் நிலையில், மக்களவையில் சுற்றுச்சுழல்துறை அமைச்சகம் இந்த விளக்கத்தைக் கொடுத்திருக்கிறது. தொடர்ந்து இருமாநிலங்களும் ஒப்புதல் அளிக்கும் நிலையில் புதிய அணைக்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இல்லையேல் புதிய கட்டுவதற்கான சாத்திய கூறுகள் குறைவே என தெரிவித்துள்ளது.