• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, உறுதிமொழி

ByT.Vasanthkumar

Apr 14, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில், அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, உறுதிமொழி ஏற்கப்பட்டது. கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட கழக அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கினங்க,
கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., வழிகாட்டுதல்படி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனையின் பேரில்,
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது‌. மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் முன்னிலையில்,
பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச்செயலாளர் பா.துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்‌.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், செ.அண்ணாதுரை, பட்டுச் செல்வி ராஜேந்திரன், ஆர்.முருகேசன், அழகு.நீலமேகம், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை சி.பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்‌.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்(எ) ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர்கே.ஜி.மாரிக்கண்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், ஆர்.அருண், மா.பிரபாகரன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி(எ)அப்துல்பாரூக், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர்.முத்தரசன், துணை அமைப்பாளர் கோவிந்தராஜன், மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜ், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க கமல், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், அரும்பாவூர் பேரூர் கழகச் செயலாளர்‌ ஆர்.ரவிச்சந்திரன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்‌.மணிவாசகம், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஆர்.குமார் மற்றும் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.