• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

குற்றவாளிகளை இணைவழி காவல்துறையினர் கைது செய்து அதிரடி நடவடிக்கை..,

ByB. Sakthivel

Apr 8, 2025

புதுச்சேரியைச் சேர்ந்த சிவனேஷ் என்பவர் வேலைவாய்ப்பிற்காக பல்வேறு இணையதளங்களில் பதிவு செய்ததையடுத்து அவருடைய மொபைல் எண்ணிற்கு, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நபர் தன்னை HR என அறிமுகப்படுத்திக்கொண்டு IT நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார்.

அதன்பின் அந்த நபர் தேர்வு கட்டணம், செயலாக்க கட்டணம் போன்ற பல்வேறு கட்டணங்களை டெபாசிட் செய்யுமாறு கூறியுள்ளார்

அவர் கூறியதை நம்பிய, சிவனேஷ் அவர் கூறிய வங்கி கணக்கிறக்கு ரூபாய் 1,73,994/- பணத்தை பல்வேறு தவணைகளாக குற்றவாளியின் வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளார்.

அதன்பிறகு சிவனேஷ் அவர்களை பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தபொழுது தொடர்புகொள்ள இயலவில்லை.

அதன்பிறகு இணையவழி மோசடிக்காரர்களால் தான் ஏமாற்றபட்டத்தை உணர்ந்த சிவனேஷ் இது சம்பந்தமாக இணைய வழி காவல் நிலையத்தில் கடந்த 14.09.2024 அன்று புகார் கொடுத்தார். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த புதுச்சேரி இணையவழி போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் குற்றவாளிகள் பற்றிய விவரம் தெரிய வந்தது, மேலும் குற்றவாளிகளின் மொபைல் எண்கள் மற்றும் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில், அந்தக் கணக்குகள் பர்வீன் மற்றும் கவுரவ் பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் அவர்கள் ஹரியானா பகுதியை சார்ந்த நபர்கள் என்பது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து தனிப்படை குழு அமைத்து டெல்லி சென்று சைபர் குற்றவாளிகளான பர்வீன் மற்றும் கவுரவ் ஆகிய இருவரையும் கைது செய்து நேற்று புதுச்சேரி சைபர் கிரைம் காவல்நிலயம் கொண்டுவந்தனர்.

மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில் பார்வீன் என்பவர் 1 சிம் கார்டு 500 ரூபாய்க்கும் மற்றும் ஒரு வங்கி கணக்கு 5000 ரூபாய்க்கும் ஆக மொத்தம் பல்வேறு சிம் கார்டு மற்றும் 100 க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை கவ்ராவ் என்பவரிடம் பணத்திற்காக விற்றுள்ளார்.

கவுரவ் என்பவர் 2019 வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 1000 த்திற்கும் மேற்பட்ட நபர்களிடம் கடந்த ஆண்டுகளில் பல கோடி ரூபாய் ரூபாய் வரை மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

பின்னர் குற்றம் சாட்டப்பட்ட பர்வீன் மற்றும் கவ்ராவ் ஆகிய இருவரையும் புதுச்சேரி தலைமை நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா, செய்தியாளர்கள் சந்தித்தார் அப்பொழுது அவர்;

போலியான கால் சென்டர்களை பதிவு செய்யப்படாத கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.போலி அப்ளிகேஷன் மூலம் மோசடி செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.தெரியாத நபர்களிடமிருந்து whatsapp/instagram/Facebook ஏதேனும் அழைப்புகள் வந்தால் அதை முற்றிலும் நம்ப வேண்டாம்.

மும்பை காவல்துறை. CBI மற்றும் TRAI அதிகாரிகள் அழைப்புகள் வந்தால், அதனை நம்ப வேண்டாம் சைபர் குற்றவாளிகள், மேற்கண்ட அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து, உங்கள் செல்போன் நம்பர் அல்லது உங்கள் வங்கிக் கணக்குகள் சைபர் குற்றம்/ஹவாலாவில் ஈடுபட்டுள்ளதாக கூறி உங்களை மிரட்டத் தொடங்குவார்கள். மேலும் விரைவில் அவர்கள் உங்களைக் கைது செய்து, கைது செய்யாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டுவார்கள்.ஆன்லைன் மோசடியில் சிக்குவதைத் தவிர்க்க சமூக ஊடகங்களில் வரும் போலியான தகவல்களை முற்றிலும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.