உச்ச நீதிமன்றம் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான தீர்ப்பு கண்டு, கன்னியாகுமரி திமுகவினர் வெடி வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நீடித்து நிலவி வந்த சட்ட மசோதா தடைகளை கடந்தது தமிழ்நாடு அரசு. குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தீர்ப்பு வெளியானதும், தமிழகம் முழுவதும் திமுகவினர் உற்சாகத்தில் வழி நடத்தினர்.

கன்னியாகுமரியில் நகர திமுக சார்பில் நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் வெடி வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், வெற்றியை பகிர்ந்து கொள்ள சுற்றுலா பயணிகளுக்கு லட்டுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி உறுப்பினர்கள் சிவசுடலைமணி, ஆட்லின், கட்சி நிர்வாகிகள் மெல்பின், பிரைட்டன், அன்பழகன், ஹரிகிருஷ்ண பெருமாள், காங்கிரஸ் பிரமுகர் தாமஸ் கெய்சர்கான், ராம்குமார், வைகுண்டராஜா, மணிகண்டராஜா, பாபு, ஆன்றனி பண்ணையார், ஆன்றனி, ரூபின்,சியாம், சேகர், வேலு, காமராஜ், விக்டர், ஷேக் மைதீன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
