• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மகாகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா

ByKalamegam Viswanathan

Apr 8, 2025

மதுரை அவனியாபுரம் மகாகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா நடைபெற்றது. 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகா காளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா நிகழ்ச்சிக்கு தலைவர் பாலச்சந்திரன், செயலாளர் முத்துமணி, பொருளாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் வேல்முருகன், முத்துராமலிங்கம், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பொங்கல் விழா துவங்கியது.

இந்நிலையில் நேற்று பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று பூக்குழி இறங்கும் விழாவில் ஏறாளமான பக்தர்கள் அலகு குத்தி பூக்குழி இறங்கினர்.

பெண்கள் வேண்டுதலுக்காக குழந்தைகளுடன் பூக்குழி இறங்கினர்.
மேலும் பறவைக்காவடி, தேர் காவடி எடுத்து வந்து பக்தர்கள் மகாகாளியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மகா காளியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் ஐயாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக, அவனியாபுரம் காவல் உதவி ஆணையர் சீதாராமன் மற்றும் காவல் ஆய்வாளர் லிங்கபாண்டியன் கிழித்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.