புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக காச நோய் தினத்தை முன்னிட்டு, இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் கலைவாணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
ஓர் ஆண்டும் மார்ச் 24 உலக காச நோய் தினமாகும் தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையின் காசநோய் பிரிவு சார்பாக மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றன. அரசு பள்ளி மற்றும் கல்லூரி பொதுமக்கள் அதிகமாக கூடும் இடம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிலையில், இன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மருத்துவ பயணம் மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர் பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வர் கலைவாணி குடியரசு துவக்கி வைத்தார். பேரணியானது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகப் பகுதியில் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து உரையாற்றிய கல்லூரி முதல்வர் கலைவாணி காசோலை பிரிவு மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனைகளை ஏற்று நடப்பதும், விழிப்புணர்வு வாசகங்கள் குறிக்கப்பட்டுள்ளவற்றை பொதுமக்கள் பின்பற்றி நடத்தல் அவசியம் எனவும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்வதன் மூலம் காசநோய் இல்லாத சமுதாயத்தை அனைவரும் உருவாக்கலாம் எனவும் தெரிவித்தார்.