புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிகளைப் புறக்கணித்து அரசு நியாய விலை கடை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் பணிகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கருப்பையா தலைமையில் 200 மேற்பட்ட தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை. அத்தியாவசியபொருள்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருட்களை பேக்கிங் செய்து வழங்கப்பட வேண்டும். கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.