புதுக்கோட்டை ஸ்ரீ நார்த்தாமலை முத்துமாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட இருசக்கர வாகன பணிமனை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 32ம் ஆண்டு தண்ணீர் பந்தல் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அருள்மிகு ஸ்ரீ நார்த்தாமலை முத்துமாரியம்மன் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் தொழில் அதிபர் எஸ் வி எஸ் ஜெயக்குமார் திமுக நிர்வாகி பிரபு ஆகியோர் கலந்துகொண்டு மோர் பணக்கம் பொங்கல் ஆகிய பிரசாதங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் இருசக்கர வாகன பணிமனை சங்க தலைவர் அய்யசாமி மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் நிர்வாகிகள்பொருளார் தாஸ் நகர பொருளார் பாண்டியன் நகர் தலைவர் பார்த்தசாரதி செயற்குழு உறுப்பினர் வீரப்பன் செந்தில்குமார் ராஜா மாரி தகவல் தொழில் நுட்ப செயலாளர் சங்கர் சபரி செல்வம் சுரேஷ் பிரசாந்த் கருப்பையா மற்றும் நிர்வாகிகள் ஏராள பேர் கலந்து கொண்டனர்.