• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை : கோவிலில் தரிசன நேரம் மாற்றம்

Byவிஷா

Apr 5, 2025

பிரதமர் நரேந்திரமோடி நாளை (ஏப்.6) ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை திறந்து வைக்க வருகை தருவதை முன்னிட்டு, ராமேஸ்வரம் கோவிலில் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாளை பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் மற்றும் தமிழக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
தற்போது ராமேஸ்வரம் முழுவதும் பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கு சுமார் 3,500 போலீசார் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மண்டபம் முதல் ராமநாதசுவாமி திருக்கோவில் வரை சுமார் 20 கி.மீ. தூரத்திற்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. தவிர ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏப்ரல் 4 முதல் 6-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, ராமேஸ்வரம் கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது கோவிலில் நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பக்தர்கள் நீராடவும், சாமி தரிசனத்திற்கும் அனுமதி இல்லை எனவும். பிற்பகல் 3.30 மணிக்கு மேல் பக்தர்கள் வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளர்.