• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

தீயணைப்பு வீரர்களுக்கு மூன்று மாத பயிற்சி துவக்கம்

ByKalamegam Viswanathan

Apr 4, 2025

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக 2023 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களில் 636 பேர் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணி துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர். இதில் 100 பேர் மதுரை மாவட்டம் கிடாரிப்பட்டி உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக பயிற்சி பள்ளி அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தீ மற்றும் விபத்து காலங்களில் எவ்வாறு செயல்படுவது தீயணைக்கும் முறைகள் உயிர் மீட்கும் பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், நீச்சல் பயிற்சி முதலுதவி பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. நடைபெற்ற துவக்க விழாவில் தென் மண்டல தீயணைப்பு துணை இயக்குனர் ராஜேஷ் கண்ணா குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

மாவட்ட அலுவலர் வெங்கட்ராமன் வரவேற்றார். கூடுதல் அலுவலர் திருமுருகன் மற்றும் நில அலுவலர்கள் கந்தசாமி, அசோக்குமார், உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசு மூன்று மாத கால பயிற்சிக்குப் பின் தீயணைப்பு நிலையங்களில் பணி நியமனம் உள்ளார்கள்.