போக்குவரத்து நெரிசலை கண்டு கொள்ளாமல் பழங்களை வழங்கிய தவெக பொதுச் செயலாளர் ஆனந்தால் ஆலந்தூர் எம்.கே.என் சாலை ஸ்தம்பித்தது. தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் ஆனந்த் வந்ததும் ஸ்தம்பித்த எம்.கே.என் சாலையில் பட்டாசு வெடித்து வரவேற்ற தவெக - வினரால் ஏற்கனவே குறுகலான சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் பந்தல் திறக்க ஆனந்த் வந்ததால், ஏராளமான தவெக-வினர் வழங்கப்படும் பழங்கள் மற்றும் உணவு பொருட்களை வாங்க மக்கள் திரண்டதால் சாலையில் வாகனங்கள் நகர முடியாமல் தவித்து வருகின்றன. இதனால் குடும்பத்துடன் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் தவிர்த்தனர்.
த வெ க அலுவலகம் திறக்கப்பட்ட பகுதி ஆதம்பாக்கம் காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி அங்கு காவல் துறையினருக்கும் தவெக வினருக்கும் இடையை வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தண்ணீர் பந்தல் திறக்கப்பட்ட ஆலந்தூர் எம் கே எம் சாலை பகுதி செந்தாமஸ் மவுண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி இங்கு காவல்துறையினர் யாரும் இல்லாததால் போக்குவரத்தை சீர் செய்ய முடியாமல் இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் சிக்கி தவித்தன.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையிலும் தண்ணீர் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு ஆனந்த் பழங்களையும் பொருள்களை வழங்கி வருகிறார்.
இதுபோன்று குறுகலான பரபரப்பான சாலைகளை பயன்படுத்தும் பொழுது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். சாலையிலேயே பட்டாசு வெடித்தும் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியும், பொது மக்களுக்கும் சேவை செய்கிறோம் என்ற பெயரில் இடையூறு ஏற்படுத்தி தண்ணீர் பந்தலை த வெ க வினர் திறந்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த்..,
சென்னை புறநகர் மாவட்டம் ஆலந்தூர் பகுதியில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. நாளை மாநிலம் முழுவதும் மாவட்டம் தோறும் வக்ஃபு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
கட்சி சார்பாக நீங்கள் எங்கு கலந்து கொள்கிறீர்கள் என கேட்டதற்கு, பதில் கூறாமல் அங்கிருந்து சென்றார்.