நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு அரசாணை 140 ஐ தீயிட்டு கொளுத்தும் போராட்டம் நடைபெற்றது.
ஐந்தாயிரம் நிரந்தர பணியிடங்களை ஒழிக்காதே, கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பறிக்காதே, மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைத்திடு அரசாணை 140 ரத்து செய். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர் நீதிமன்ற ஆணையின்படி பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலான கோரிக்கைகளை வலியுறுத்தியும் அரசாணை 140 ஐ தீயிட்டு கொளுத்தும் போராட்டம் நடைபெற்றது.
மதுரை தாமரை தொட்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக கோட்டத் தலைவர்கள் மாரி, மணிமாறன் ஆகியோர் தலைமையில் மாநில பொருளாளர் தமிழ் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில செயலாளர் நீதி ராஜா மாவட்ட செயலாளர் சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் ராஜமாணிக்கம், மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.