மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் பூலாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 67வது ஆண்டு விழா நடைபெற்றது.
மதுரை கிழக்கு வட்டார கல்வி அலுவலர் ஜான்சி தலைமையில் வட்டார கல்வி அலுவலர் எஸ்தர் இந்திராணி வட்டார வளமைய மேற்பார்வையாளர் மஞ்சுளா தேவி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை ஷீலாதேவி வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற பேச்சு போட்டி ஓவிய போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் ஆடல் பாடல், சிலம்பம் நாட்டுப்புறகலை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இடைநிலை ஆசிரியர் விஜயா நன்றியுரை கூறினார். இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மைகுழு உறுப்பினர்கள் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பூலாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 67வது ஆண்டு விழா
