• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

காளி கொலை வழக்கில் மேலும் மூவரை பிடிக்க சென்றபோது ஒருவர் என்கவுண்டர்..,

ByKalamegam Viswanathan

Apr 1, 2025

மதுரையில் கிளாமர் காளி கொலை வழக்கில் பிரபல ரவுடி வெள்ளைக்காணியின் தாயார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு 29ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கிளாமர் காளிகொலை வழக்கில் முதல் ஆளாக சுள்ளான் முத்துப்பாண்டி என்ற நபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதனைத் தொடர்ந்து பிரபல ரவுடி வெள்ளைக்காணியின் தாயார் ஜெயக்கொடி மற்றும் சிவகங்கை மாவட்டம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் முத்துகிருஷ்ணன் மதுரை கல்மேடு நந்தகுமார் காமராஜபுரம் நவீன் குமார், சென்னை சேர்ந்த கார்த்திக் திருப்பூர் சேர்ந்த அசன் ஆகிய ஏழு பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்..

இந்த நிலையில் அந்த கொலை வழக்கில் மேலும் குற்றவாளியாக கருதப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் யை தனி படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்றைய தினம் விளாச்சேரி பகுதியில் சுபாஷ் சந்திரபோஸ் கஞ்சா விற்பனை செய்ததாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தினர்.

தொடர்ந்து இன்று மாலை சுபாஷ் சந்திர போஸ் தனது காரில் விளாச்சேரி பகுதியில் சுற்றி தெரிந்தவரை தனிப்படை போலீசார் விரட்டி பிடிக்க முயற்சி செய்தனர் தொடர்ந்து அவர் கல்லம்பல் பகுதியில் காரை நிறுத்தி தப்பியோட முயற்சி செய்தவரை போலீசார் சுற்றி வளைத்து அவரை சரணடைய முயற்சி செய்தனர். உடனே தன்னிடமிருந்த வாழை எடுத்து போலீசாரை நோக்கி வீசியுள்ளார். அதில் தலைமை காவலர்கள் இரண்டு பேரும் மீது வெட்டுக்காயம் ஏற்பட்டது.

அதனை தனது காவல் ஆய்வாளர் பூமிநாதன் தனது துப்பாக்கியை காட்டி சுபாஷ் சந்திர போசை சரணடைய எச்சரிக்கை விடுத்துள்ளார். உடனே சுபாஷ் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை போலீசாரை நோக்கி சுட்டுள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக நூல் நிலையில் தப்பிய காவல் ஆய்வாளர் பூமிநாதன் சுபாஷை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. அவர் துப்பாக்கியால் சுட்டதில் சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்தார். இதனை அடுத்து சுபாஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உள்ளது.