• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

என்ன அமைச்சரே! கிராம சபை கூட்டத்தை ஆர்ப்பாட்டமா மாத்திட்டீங்களே!!!

ByK Kaliraj

Mar 29, 2025

விருதுநகர் மாவட்டம். பாலவனத்தில் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்/தமிழகம் முழுவதும் மாவட்டம், நகரம், ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் திமுக கட்சியினர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு வாய்ப்பு திட்டத்தில் வழங்கப்படாமல் உள்ள சுமார் 4000 கோடியை உடனடியாக வழங்க வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவநத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அந்த கூட்டத்தில் பேச தொடங்கிய சில நிமிடத்தில் கூட்டத்தில் இருந்த பெண்மணி சாத்தூர் ராமச்சந்திரனிடம் குறைகளை குறித்து கூற ஆரம்பித்தார். உடனடியாக ஆர்ப்பாட்டத்தை பாதியில் முடித்துக் கொண்டு சாத்தூர் ராமச்சந்திரன் உடனடியாக வெளியேறினார் இந்த காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.