விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் சாலையை அகலப்படுத்த எம்எல்ஏ ரகுராமன் சட்டப்பேரவையில் கோரிக்கை. சாத்தூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ வெம்பக்கோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த ஏழாயிரம் பண்ணை மற்றும் மாதாங் கோவில்பட்டியில் குறுகலான சாலை பல வருடங்களாக இருப்பதால் எதிரெதிரே வாகனங்கள் விலக முடியாமல் போக்குவரத்து நெரிசலால் அப்பகுதி பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதால், நீண்டகால பிரச்சனை தீர்க்க சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன் சட்டசபையில் உரை நிகழ்த்தினார். அதற்கு அமைச்சர் ஏ.வ.வேலு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பதில் அளித்தார்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)