பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர் கூட்டத்தை புறக்கணித்து கோஷமிட்டு வெளியே சென்றதால் பரபரப்பு. பொள்ளாச்சி-மார்ச்-27 பொள்ளாச்சி நகராட்சியில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் கணேசன் திமுக,அதிமுக கவுன்சிலர்கள் உட்பட நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர் இந்த கூட்டத்தில் 2025-26ம் ஆண்டுக்கான நிதி அறிக்கை வெளியிடப்பட்டது மேலும் நகர மன்ற உறுப்பினராக செயல்படும் மணிமாலா வழக்கறிஞராக பணியாற்ற உள்ளதை அடுத்து துணைத் தலைவர் கௌதமன் தங்க நாணயம் வழங்கி சால்வை அணிவித்து கௌரவித்தார்.
பின் கூட்டம் தொடங்கியவுடன் அதிமுக கவுன்சிலர் ஜேம்ஸ் ராஜா நகர மன்ற தலைவர் அவர்களிடம் கூறுகையில் தேர் நிலையம் அருகே நகராட்சி சார்பில் வியாபாரிகளிடம் வசூல் செய்ய கடைகள் ஆண்டு குத்தகை அடிப்படையில் விடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 56 கடைகள் புதிதாக கட்டப்பட்டு தனிநபருக்கு 9 ஆண்டுகள் ஏலம் விட முடிவு செய்துள்ளார்கள் மூன்று ஆண்டுகள் மட்டுமே குத்தகைக்கு விட வேண்டும்.

ஒன்பது ஆண்டுகள் தந்தால் நகராட்சிக்கு கோடிக்கணக்கில் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும் இது தனிநபர் ஒருவர் வளர்ச்சிக்கு உதவும் செயலாக உள்ளது எனவும் தற்போது கோவை சாலையில் உள்ள சமுதாய நலக்கூடம் அம்மா மண்டபம் அதிமுக ஆட்சி காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 75 லட்சத்தில் கட்டப்பட்டது. அதை நகராட்சி நிர்வாகம் தற்போது வசம் உள்ளது இந்த மண்டபத்தை புனரமைக்க 30 லட்சம் ரூபாய் செலவு செய்ய குறிப்பிட்டுள்ளார்கள்.
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நகராட்சி சார்பில் அறிக்கை கொடுக்கப்பட்டதா ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பாட்டுக்கு கட்டப்பட்ட மண்டபம் தற்போது தனியார் ஒருவருக்கு விடுவதும் பொதுமக்கள் பயன்பாடு இல்லாமல் புறக்கணிக்கும் செயலாகும். ஆகவே அதிமுக சார்பில் புறகணிக்கிறோம் என கூறி நகராட்சி தலைவரிடம் மனு அளித்துவிட்டு விற்காதே விற்காதே நகராட்சி இடத்தை தனியாருக்கு விற்காதே என கூறி கோஷமிட்டு வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நகராட்சி கூட்டத்தில் 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .













; ?>)
; ?>)
; ?>)