மதுரை மார்ச் 26, 2025 மங்கையர்க்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் எக்ஸ்னோரா மற்றும் கிரீன் ட்ரீம் கிளப், மை பாரத் மற்றும் நேரு யுவ கேந்திரா ஆகியவற்றுடன் இணைந்து உலக நீர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. “நிலைத்த எதிர்காலம்: பாதுகாப்பு, புதுமை மற்றும் செயல்பாடு” என்ற தலைப்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கரகோணத்தில் உள்ள டாக்டர். சொமர்வெல் மெமோரியல் சி எஸ் ஐ மருத்துவக் கல்லூரியின் மருத்துவர் நிர்வாகக் கல்லூரி முதல்வர் டாக்டர் தி.ஜெயராஜசேகர் பங்கேற்று, நீர்ப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும், நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் விளக்கி சிறப்புரை வழங்கினார். நிகழ்வில் கல்லூரி செயலர் முனைவர் பி. அசோக்குமார், இயக்குநர் சக்தி பிரனேஷ், சேர்மன் பிரதீப் குமார், கல்லூரி முதல்வர் முனைவர் உமா பாஸ்கர், கல்வி புலத் தலைவர் செந்தூர் பிரியதர்ஷினி ஆகியோர் மாணவர்களை ஊக்குவித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவிகள் ஈடுபட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். நிகழ்ச்சி இறுதியில் நீரைப் பாதுகாக்கும் உறுதி மொழியும் எடுக்கப்பட்டது. நிகழ்வில் பல்வேறு போட்டிகள், பயிலரங்கங்கள் மற்றும் பரிசளிப்பு நடைபெற்றது.