• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

சாத்தூரில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் ஒருவர் உயிரிழந்தார். உடலை கைப்பற்றி சாத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள குருலிங்கா புரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் சீத்தாராம் (26). இவர் எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் என் ஜி ஓ காலனியில் உள்ள கால்நடை மருத்துவர் சுப்புராஜ் என்பவரது வீட்டில் மின்சார வயரிங் பணி செய்து கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து மயங்கியுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளனர்.

ஆனால் சாத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர் சீதாராம் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

எலக்ட்ரீசியன் சீதாராம் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாத்தூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. பணி செய்து கொண்டிருந்த போது எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.